2021க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோ!

2021க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும்  என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் ஐ.ஐ.டி.யில்  பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பங்கேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் சந்திரயான் 2 விண்வெளி பயனத்தின் ஒருகட்டமாக விக்ரம் லேண்டரை நிலவுக்குள் தரையிறக்கும் முயற்சி நாம் திட்டமிட்டதைப்போல் நடக்கவில்லை என்பதால் ‘ககன்யான்’ திட்டத்தை நாம் கைவிட்டு விடப்போவதில்லை.

சந்திரயான் 2 திட்டத்தின்படி அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் கருவி இன்னும் ஏழரை ஆண்டுகள்வரை நமக்கு
தகவல்களை அனுப்பி வைக்கும். விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சியை தவிர மற்ற அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வெற்றி இல்லையா?

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் தானியங்கி விண்வெளி ஓடத்தை அனுப்பி வைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இரண்டாவது தானியங்கி விண்வெளி ஓடத்தை 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அனுப்புவோம்.

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நமது சொந்த ராக்கெட் மூலம் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்பி வைப்போம். இந்த இலக்கை நோக்கித்தான் இஸ்ரோ தற்போது பணியாற்றி வருகிறது என கூறினார்.

No comments