கடலுக்குச் செல்லாதீர்கள்- எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசுவதால் எதிர்வரும் சில தினங்களுக்கு மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைய இந்த விடயம் வெளியிடப்படுவதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

மன்னார் ஊடாக புத்தளம், கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் காற்றில் வேகமானது சுமார் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவாற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கடற்பிராந்தியங்களை தவிர்த்து ஏனைய கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, நாளை (30) காலை 6 மணி முதல், நாளை மறுதினம் (31) காலை 8 மணி வரையான 26 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments