கறுப்பு பணத்தை காப்பாற்றவே ரஜனி பாஜகவுக்கு ஆதரவு; வேல்முருகன் சீற்றம்

தன்னிடம் இருக்கும் கருப்பு பணத்தை காப்பாற்றவே நடிகர் ரஜனிகாந் பாஜகவுக்கும் அதிமுகாவுக்கும் சாதகமான ஆதரவு கருத்துக்களை தெரிவித்துவருவதாக தமிழக வாழ்வுரிமைகட்சி நிறுவனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில்  மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு மாநாட்டுக்கு வந்தபோது ஊடகவியலாளர்களுக்கு  கருத்து தெரிவித்தபோது . அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மயிலாடு துறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அணு உலை திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து போராடும்.

காஷ்மீர் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் வாங்கி வரும் பெரும் கருப்பு பணத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் மத்திய- மாநில அரசுகளுக்கு ஆதரவாக அவர் எப்போதும் குரல் கொடுத்து வருகிறார். தமிழக மக்கள் தான் அவரை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

No comments