வாள் வெட்டு குழுக்களை தேடி தேடுதல் வேட்டை

யாழ்ப்பாணத்தில் புதிதாக வாள்வெட்டுக் குழு ஒன்று உருவாகியுள்ளது என்றும் அந்தக் குழுவினரைப் பிடிப்பதற்கு சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் அட்டாகாசம் தொடர்ந்தவாறு காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் பாசையூரைத் தளமாகக்கொண்டு தற்போது ஒரு வாள்வெட்டுக் குழு உருவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறைச் சந்தியில் நேற்று முன்தினம் குருநகர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது.
Post a Comment