கன்னியா விவகாரம்; தடையை நீடித்தார் இளஞ்செழியன்

பௌத்த மயமாக்கலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் விடுத்திருந்த இடைகால தடையுத்தரவு இன்று (29) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போதே இந்த உத்தரவு நீடிக்கப்பட்டது.

இதன்படி, இந்த இடைகால தடையுத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கன்னியா வெந்நீரூற்று வழக்கு விசாரணைகள் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை சட்டத்தரணி பிரஷாந்தினி உதயகுமார் இந்த வழக்கை பதிவு செய்திருந்தார். மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments