கொல்லப்பட்டார் பின்லேடனின் மகன்?

அல்-கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் வான்வழித் தாக்குதலில் இறந்தார் என்று புலனாய்வுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்த இடம் மற்றும் தேதி தெளிவாக அவர்கள் குறிப்பிடவில்லை. இதுகுறித்து அமொிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனும் எந்தவொரு கருத்தையும்  தெரிவிக்கவில்லை.

30 வயது என கணிக்கப்படும் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்த காணொளி மற்றும் ஒலிப் பதிவு மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து ஹம்ஸா பின்லேடன் பயங்கரவாதப் பட்டியலில் அமொிக்காவினால் இணக்கப்பட்டார். அவரின் தலைக்கு 1 மில்லியன் அமொிக்க டொலர் விதித்தது அமொிக்கா.

ஹம்ஸாவின் மரணம் குறித்து பெயர் குறிப்பிடப்படாதா அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி என்.பி.சி நியூஸ், நியூயார்க் டைம்ஸ் மற்றும் சி.என்.என் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களால் பரவலாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பின்லாடனின் கொல்லப்பட்டதை அடுத்து அல்-கொய்தா அமைபின் தலைவராக ஹம்ஸா திகழ்ந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு இராணுவ நடவடிக்கையில் ஹம்ஸா கொல்லப்பட்டார் என கூறப்படுகின்றது.

ஹம்ஸாவின் மரணம் குறித்து இடம், நேரம், திகதி என்பன தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

இதேபோன்று அல்-கொய்தா அமைப்பும் இவரின் இறப்புக் குறித்து தகவல் எதையும் வெளியிடல்லை.

ஹம்ஸா பின்லேடன் யார்?

ஹம்ஸா பின்லேடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவால் உலக பயங்கரவாதியாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். பின்லேடனின் வாரிசாகவே அவர் அனைவராலும் பார்க்கப்பட்டார்.
அவர் ஈரானில் வீட்டுக் காவலில் இருந்ததாக நம்பப்பட்டது. இருப்பினும் அவர் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இருந்திருக்கலாம் என்று மற்றொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் தனது தாயுடன் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிறந்ததாக கருதப்படுகிறது.
தான்சானியா மற்றும் கென்யாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது 1998 குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அப்துல்லா அகமது அப்துல்லா அல்லது அபு முஹம்மது அல் மஸ்ரி ஆகியோரின் மகளை ஹம்ஸா திருமணம் செய்து கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

No comments