ஜனாதிபதி தேர்தலை முந்தும் மாகாணசபை தேர்தல்!


அனைவரும் ஜனாதிபதி தேர்தல் கனவிலிருக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என கருத்துக்கேள் பத்திரம் ஒன்றை சட்டமா அதிபர் ஊடாக உச்சநீதிமன்றத்தில் இன்று ஜனாதிபதி மைத்திரி தாக்கல் செய்கின்றார்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் அனைத்தும் மிக மும்முரமாக இடம்பெறுகின்ற அதேநேரம் தேர்தலுக்கான திகதியையும் தேர்தல்கள் திணைக்களம் வரையறுத்துள்ளது.இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக கவனம் செலுத்துவதாக தெரியவருகின்றது.

இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் அல்லது புதிய முறையில் உடன் நடத்துவதற்கான சந்தர்ப்பம் உண்டா என உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பதற்காக சட்டமா அதிபரும் ஊடாக நகர்த்தல் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றார். இவ்வாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்படுகின்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தின் ஊடாக எதிர்வரும் 6ஆம் தேதிக்கு முன்னர் அதற்குரிய பதில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கூட்டத்தில் அடுத்து இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நிர்ணயம் தற்காலிகமாக பிற்போடப்பட்டு ஜனாதிபதியின் புதிய கேள்விக்கான பதில் அறிவிக்கப்படும்.அதன் பின்னராக 6ஆம் தேதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்படலாம்.

No comments