குளத்தில் மீன் பிடித்தவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அமைந்திருக்கின்ற குமரி குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபர் ஒருவர் மர்மமான நிலையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வழக்கமாக குறித்த குளத்தில் மீன் பிடிக்க சென்ற நபரை நேற்று (07) மீன்பிடிக்கச் சென்ற நிலையில் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் இரவு முழுவதும் தேடி இன்று (08) காலை சடலமாக மீட்டுள்ளனர். 

குறித்த நபர் பகல் வேளைகளில் மேசன் தொழில் செய்வதோடு, மாலை வேளைகளில் குறித்த குளத்தில் சென்று மீன் பிடித்து தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments