கடலில் இறக்கப்பட்டது அணுஉலை கப்பல்! சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கவலை.

ரஷ்யா Akademik Lomonosov எனும் கப்பலின்  இரண்டு அணு உலைகளைக் கொண்ட மிதக்கும் அணுமின் நிலையத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

நேற்றய தினம் அந்த அணுமின் நிலையக் கப்பல் ஆர்க்டிக் கடலில் இறக்கி  ஐயாயிரம் கிலோமீட்டர் பயணத்தைத் தொடங்கியது என சர்வதேச உடகங்கள் தெரிவிக்கின்றன. 
ரஷ்யா நாட்டின் தொலைதூரத்திலுள்ள பகுதிகளுக்கு மின்வசதி செய்து கொடுப்பது அதன் நோக்கம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளனது. 

எனினும் அந்த அணுசக்தி கப்பலால் ஏற்படக்கூடிய அணுச்சக்தி விபத்து குறித்து சுற்றுச்சூழல் வல்லுநர்கள், அந்தக் கப்பலை அணுச்சக்தி டைட்டானிக் என்று கூறியுள்ளது அனைத்துலக சுற்றுப்புற அமைப்பான Greenpeace. அனால்  அந்தக் கப்பல் பாதுகாப்பானதே என்று ரஷ்யா தெரிவித்துள்ள போதும் இதுகுறித்தான அச்சம் சூழலியல் ஆய்வாளர்களால் பரப்புரை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments