தொடரும் அடக்குமுறைகள்! கவலை கொள்ளும் அமெரிக்கா


காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது
காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் மார்கன் ஆர்டாகஸ் செய்தி குறிப்பொன்று வெளியிட்டுள்ளார் அதில் ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா கவனித்து வருகிறது. கைது நடவடிக்கைகளும், குடியிருப்ப பகுதியில் விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகளும் கவலை அளிக்கின்றன.
மனித உரிமைகளுகளுக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும். இணக்கமான முறையில் சட்டங்களுக்கு உட்பட்டு இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
இந்திய எல்லையில் அமைதி நிலை நிறுத்தப்பட வேண்டும். அதற்காக எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments