உலகில் மிகவும் செங்குத்தான வீதி! மீண்டும் தோற்றது நியூசிலாந்து

உலகிலேயே மிக செங்குத்தான வீதியாக நியூசிலாந்து நாட்டின் டியூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் வீதி  கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

கின்னஸ் சான்றிதழின்படி, அந்த சாலை 35 சதவீத அளவிற்கு செங்குத்தாகவும், இரு புறங்களிலும் வீடுகளும் இருந்தது.  இந்நிலையில் தற்போது நியூசிலாந்தின் இந்த சாதனையை பிரித்தானியாவில்  வேல்ஸ் மாநிலத்தின் ஹார்லெச் நகரத்தில் உள்ளது போர்ட் பென் லெச் சாலை. இந்த சாலை 37.5 சதவீத  செங்குத்தாக இருப்பதை கடந்த 6-ம் தேதி உலக கின்னஸ் சாதனை நிறுவனத்தின் அதிகாரிகள் உறுதி செய்தனர். இதற்கான சான்றிதழை அப்பகுதியில் வசிக்கும் மூத்த குடிமகளுக்கு அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

No comments