திமுகவினர் சம்மதம்! வைகோ எதிர்ப்பு,

இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகவர் (NIA) அமைப்புக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத்  திருத்த மசோதாவுக்கு ஆதரவாக திமுக வாக்களித்தது. இதையடுத்து, திமுக சிறுபான்மையினருக்கு எதிரான NIAவை ஆதரித்து வாக்களித்துவிட்டது என்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும் வேளையில்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம், NIA சட்டத் திருத்த மசோதா குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு, “NIA சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக ஆதரவளித்த முடிவிலிருந்து நான் வேறுபடுகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என்றுபதிலளித்துள்ளார்.
பல்வேறு நிலைகளில் மதிமுக பல்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகளோடும் கூட்டணி வைத்துகொண்டது, அனால் அவர்கள் தாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் தமக்கென்று இருக்கும் முக்கிய கொள்கை முடிவுகளில் இருந்து பின்வாங்குவதில்லை என்பது இந்நிலையில் நினைவுபடுத்தகூடியது.

No comments