துருக்கி தூதர் சுட்டுக்கொலை! குருதிஷ் படையினர் சுற்றிவளைப்பு.


வடக்கு ஈராக்கின் இர்பில் பகுதியில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் துருக்கியின்  தூதரக அதிகாரி பலியாகி உள்ளதக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் (KRG) ஆட்சிப் பகுதியில்  உள்ள வடக்கு ஈராக்கின் இர்பில் என்ற உணவகத்தில் உணவருந்திகொண்டிருந்த போது ஆயுதமேந்திய தாக்குதலில் குறித்த  துருக்கிய தூதரக அதிகாரி கொல்லப்பட்டார் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர் ஈராக்குக்கான துருக்கியின் துணை உதவித் தூதர் என்று கூறப்படுகிறது.

சம்பவம் நடைபெற்ற விடுதியை   அண்டிய பகுதிகள் குருதிஷ்  படையினரின் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்துள்ளதக்க மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

No comments