கன்னியாவில் விகாரையா?மைத்திரிக்கு தெரியவே தெரியாதாம்?


கன்னியாவில், விகாரை கட்டும்படி தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு கடிதம் எழுதும்படி தனது இணைப்பு செயலாளருக்கு தான் கூறவில்லை என இலங்கை ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும் அப்படி எழுதப்பட்டிருந்தால் அது பற்றி விசாரிப்பதாக உறுதியளித்ததாகவும் அரச அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.விகாரை கட்டுமானம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின்; தூதுக்குழுவை சந்திக்க் அவர் உடன்பட்டுள்ளதாகவும் இதற்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படுமெனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இவ்விவகாரம் பற்றி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் வரை, எந்தவித விகாரை கட்டுமான பணிக்கும் கன்னியாவில் இடம் கொடுக்க வேண்டாம் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரவை அழைத்தான பணித்துள்ளதாகவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகள் பௌத்த பிக்குவால் இன்று அறுத்து எறியப்பட்டுள்ளது.
கடந்த ஆம் திகதி நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது. இந்த பொங்கல் நிகழ்வின் போது ஆலய சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்றைய தினம் நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக்கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் இன்று (17)முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments