தன்னாட்சி, தற்சார்பு, தன்நிறைவு :விக்கினேஸ்வரன்!நாங்கள் எங்கள் உள்நாட்டு மற்றும் புலம் பெயர்ந்த மக்களின் கொடைகளையும் நிதிகளையும் எதிர்பார்த்தே கட்சி நடத்துகின்றோம். எந்த ஒரு நாட்டையோ கட்சியையோ சார்ந்து பயணிக்கவில்லை. எமது நலன் விரும்பிகளின் கொடையே எம்மை நடத்துகின்றது. எமது தாரக மந்திரங்கள் தன்னாட்சி,தற்சார்பு மற்றும் தன்நிறைவு ஆகுமென முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


எம்மை நாமே ஆளவழிவகுக்கவேண்டும் என்பதே தன்னாட்சி கோருவது. எமது தாயகமாம் பாரம்பரிய இடங்களில் நாம் தொடர்ந்திருக்க எமக்குத் தன்னாட்சி அவசியம். அதைநாம் வலியுறுத்திவருகின்றோம். மேலும் எமக்கு தன்னாட்சி கிடைத்த பின்னரே எமது உத்தியோக பூர்வபொருளாதா ரமேம்பாடும் முன்னேற்றமும் பாரியவிதத்தில் கவனத்திற்கு எடுக்கப்படவேண்டும்.

வெகுவிரைவில் வடக்குகிழக்கு மாகாணங்கள் தமிழர் வாழ் இடங்களாக இராதுவேற்று இனத்தவர் வாழிடமாக ஆகிவிடும். அதனால் நாம் பதவிக்குவந்தால் பொருளாதாரவிருத்திக்குப் பதில் அரசியல் தீர்வைப் பெறுவதிலேயே முழுக் கவனத்தையுஞ் செலுத்துவோம். அரசமுதலீடுகளைநம்பிக் காத்திருந்தோமானால் அவர்கள் பேச்சில் கூறுபவற்றை நடைமுறையில் காட்டுவதாகக்காட்டி தாமதப்படுத்தி,பொருளாதாரவிருத்திக்கானநடவடிக்கைகளில் முழு மனதுடன் இறங்காது அரசியல் தீர்வையும் தராதுகாலப்போக்கில் ஏமாற்றிவிடுவார். இன்று வரையில் ஏமாற்றமே எமக்குமிஞ்சியுள்ளதெனவும் யாழில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.No comments