பாடசாலை பரிசளிப்பில் பங்கேற்க ஞாயிறு யாழ் வரும் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார். மறுநாள் திங்கட்கிழமை (ஜூலை 15) சுன்னாகம் – கந்தரோடை ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் அவர் பங்கேற்கிறார்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஓகஸ்ட் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார். எனினும் அவரது வருகை தொடர்பான திகதி உறுதிப்படுத்தப்படவில்லை.

யாழ்ப்பாணத்துக்கு நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை வருகை தரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அன்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியினரை நட்சத்திர விடுதி ஒன்றில் சந்திக்கிறார்.

அத்துடன், வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை கந்தரோடை ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அத்துடன், அன்றைய தினம் காரைநகருக்கும் பிரதமர் செல்கிறார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வருகை தருகிறார். இதன்போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கலந்துரையாடல்களில் அவர் பங்கேற்கிறார்.

இந்நிலையில், அடுத்த மாதம் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மயிலிட்டி துறைமுகத்தை சீரமைப்பின் பின்னர் மக்களிடம் கையளித்தல், பலாலியில் பொதுமக்களின் காணி விடுவிப்பு, பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகளை பார்வையிடம் ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

அத்துடன், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்று தரிசிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதியின் வருகை தொடர்பான திகதி உறுதிப்படுத்தப்படவில்லை.

No comments