புகையிரதம் மோதி இளைஞர்கள் இருவர் பலி


கிளிநொச்சி- அறிவியல்நகா் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளனா்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மோதியே இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்கள் இருவரும் விபத்து இடம்பெற்ற பகுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில் அமர்ந்திருந்து கதைத்துக் கொண்டிருந்ததாகவம், புகையிரதம் வருவதை

அவதானிக்காமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரழந்தவர்களின் சடலங்கள் புகையிர அதிகாரிகளினால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments