விசாரணைக்கு வரமாட்டேன்:மைத்திரி?


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து முன்னிலையாக அழைப்பு விடுக்கப்படவில்லை.அவ்வாறு அழைப்பு கிடைத்தாலும் முன்னிலையாவதில்லை.இதுவொரு அலரிமாளிகை நாடகமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஊடகப்பிரதானிகளிடம் இத்தகவலை தெரிவித்த இலங்கை ஜனாதிபதி மைத்திரி போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கான தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும்.அதற்கான ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த அமர்வுகளில் ஜனாதிபதி மற்றும் பிரதமர்,இராணுவ தளபதியென பலரும் முன்னிலையாவதான அறிவிப்பின் மத்தியிலேயே மைத்திரி இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? ஏன்பதை சுதந்திரக்கட்சி மேற்கொள்ளும் தீர்மானத்தின் அடிப்படையில் செயற்படுவேன என தெரிவித்த அவர் நாட்டின் ஸ்திரத்தன்மை இன்மைக்கு 19ம் திருத்தச் சட்டமே காரணம்.யார் அடுத்ததாக ஆட்சிக்கு வந்தாலும், 19ம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

No comments