இல்மனைட் அகழ்வை தடுக்க முன்வாருங்கள்- ஜீ.ஜெ.பிரகாஸ்

முப்பது வருட கால யுத்தத்தினாலும், சுனாமி அனர்த்தினாலும்  உடமைகளை இழந்து, உறவுகளை இழந்து நிர்க்கதியான வாழ்க்கை வாழும் மக்களின் வாழ்வில் மீன்டும் ஒரு அனர்த்தை திட்டமிட்டு ஏற்படுத்த அரச உயர் அதிகாரிகளும்,  தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் செயற்படும்  கேவலமானதும் கீழ்த்தரமானதுமான செயற்பாடாக உள்ளது.

வாகரை பிரதேச செயலக எல்லைப்பகுதியில் பால்சேனை வடக்கு தொடக்கம் வெருகல் வரையான 48Km நீளத்திலும் , கடக்கரையை ஒரமாக 50M அகலத்திலும் நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் இல்மனைட்  அகழ்வு மேற்கொள்ள பிரதேச அமைப்புக்களினதும், பொதுமக்களினதும், பிரதேச அனுமதியின்றியும், மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அனுமதியும் பெறாது.

 கோடிக்கணக்கில் பணத்தை  அரச அதிகாரிகளிக்கும்,  அரசியல்வாதிகளிக்கும் கொடுத்து சட்டத்துக்கு முரணாக மண் அகழ்வு செய்ய உள்ளார்கள். இதன் முதல்கட்ட வேலை பொதுமக்களினதும், பொது அமைப்புக்களினது எதிர்ப்பினை மீறி அகழ்வு பணிக்கான வேலை தற்போது ஆரம்பித்துள்ளார்கள். இன்று மண் பரீசோதனை செய்வதற்காக ஒருசில மண் மாபியாக்களின் ஊழியர்கள் கதிரவெளி கிராமத்து கடற்கரை ஓரத்தில் மண் எடுக்க வந்துள்ளார்கள்.

கடற்கரை ஓரமாக உள்ள மண்ணை அகழ்வதனால் வாகரை பிரதேச இயற்கையாக உள்ள  புவியியல் அமைப்பில் பாரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இந்த மாற்றம் வாகரை பிரதேசத்தை மையமாக கொண்டு இயற்கை அனர்த்தம் ஏற்படும் அளவிக்கு வித்திட உள்ளது.

அது மாத்திரம்மல்ல வாகரை மக்களின்
பொருளாதாரம், சமூகம்,சுகாதாரம்,  மதம் சார்ந்த பிரச்சனை என்று தொடர்ந்து பாரிய பிரச்சனைகளை தோற்றிவிக்க போக உள்ளது. இதில் இல்மனைட் அகவுழ்வுக்கு அனுமதி கொடுத்த எவரும் பாதிக்கப்படபோவதில்லை அத்தோடு இல்மனைட் அகழ்வினை மேற்கொள்ள வைக்க கோடிக்கணக்கில் பணத்தை பெற்ற எந்த அரசியல்வாதிகளும் இந்த பிரதேசத்தில் வாழப்போறதில்லை.

ஆனால் சாதாரண பொது மக்கள் அன்றாடம் கூலித்தொழில் செய்து. மீன்பிடியையும், விவசாயத்தை தங்கள் ஜீபனோபாய தொழிலாக செய்யும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட போறார்கள் என்பது உண்மை. தயவு செய்து தமிழ் சட்டத்தரணிகளே,  ஊடகவியலாளர்களே, சமூக நலம்விரும்பிகளே, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சகோதரர்களே சற்று சிந்தித்து இந்த இல்மனைட் அகழ்வை தடுக்க முன்வாருங்கள்.

No comments