ஹிஸ்புல்லாவை விடமால் துரத்தும் வெட்டிவீரம்!

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் வழங்குவதற்காக தீவிரவாத விசாரணைப் பிரிவில் இன்றையதினம் (15) முன்னிலையாகிவாக்குமூலமளித்திருந்தார்.
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி இரவு 10 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில், கல்குடா பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் அரேபியர்கள் இருவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் தீவிரவாத விசாரணை பிரிவினரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதற்கமைய இன்று 9.45மணியளவில் தீவிரவாத விசாரணைப் பிரிவுக்கு அவர் சமூகமளித்திருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.  

No comments