காட்டிக்கொடுத்தமைக்கு பரிசு:மைத்திரி வழங்கினார்!


சாய்ந்தமருது பிரதேசத்தில்; பதுங்கியிருந்த முஸ்லீம் தீவிரவாதிகள் இடம்பற்றிய தகவல்களை வழங்கிய முஸ்லிம்கள் மூவருக்கு தலா 10 இலட்ச ரூபாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (07) பரிசாக வழங்கியுள்ளார்.

இதனை இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேவேளை 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளின்போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 25 இலட்ச ரூபாய் நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி; இதன்போது வழங்கியிருந்தார்.

அத்தோடு சாய்ந்தமருது பிரதேசத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம் பற்றிய தகவல்களை வழங்கிய முஸ்லிம் இனத்தவர்கள் மூவருக்கு தலா 10 இலட்ச ரூபாய் நிதி அன்பளிப்பினையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வழங்கினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈழவிடுதலைப்போராட்டத்தின் போது காட்டிக்கொடுப்புக்களிலும் இராணுவ உளவு பிரிவுகளிலும் முக்கிய பங்காற்றிய முஸ்லீம் தரப்புக்கள் தற்போது தமது வீட்டுக்குள்ளேயே காட்டிக்கொடுக்க தொடங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments