வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்!

தமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில்  காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி மறைந்தார்.
வதந்தி செய்தி என்றே நம்பபட்ட நிலையில் உறவினர்களும் மருத்துவமனையும் இறப்பினை உறுதிசெய்துள்ளனர்.

மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர். இவர் 1979ஆம் ஆண்டு தனது கிரேஸி கிரியேஷன் என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். கே.பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
கமல்ஹாசன் நடிப்பில் வெற்றியடைந்த பெரும்பாலான காமெடிப் படங்களின் பின்னணியில் கிரேஸி மோகன் பணியாற்றியுள்ளார். சதிலீலாவதி, காதலா காதலா, அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, தெனாலி, பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல படங்களின் திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் பணியாற்றியதோடு நடிக்கவும் செய்துள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments