ஒரே நாளில் 200 கோடி தொன் பனிமலை உருகியது! அதிர்ச்சியில் ஆராச்சியாளர்கள்;

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆட காரணமாகியிருக்கும் இதே சிக்கல் தான் நேற்று யாருமே எதிர்பார்த்திராத அளவிற்கு பனிப்பாறைகள் கிரீன்லாந்தில் உருகவும் காரணமாக இருந்திருக்கின்றன. இதனால் வானிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஒரே நாளில் 200 கோடி தொன் ஐஸ் உருகினால் யார் தான் அதிர்ச்சியடைய மாட்டார்கள்?

கிரீன்லாந்து என்றவுடன் பச்சைப்பசேல் என பாரதிராஜா படம் ஓப்பனிங் போல் இருக்கும் என நினைக்கவே

அல்பெடோ நிகழ்வு (albedo)

பனிப்பாறையின் மேல் படியும் பனித்துகள்கள் அடர் வெள்ளை நிறத்தில் இருப்பதால் அந்த பிராந்தியம் முழுவதின் மீதும் விழும் சூரிய ஒளியினை எதிரொளிக்கும். இதனால் வெப்பநிலையானது குறைந்து பனியின் அடர்த்தி அதிகமாகும். இந்த நிகழ்வு தொடரும்பட்சத்தில் பனியின் மேற்பரப்பு ஒரே சீராக இருக்காது. இது அடர்த்தி குறைவான பனிப்பாறைகளுக்குள் அதிக சூரிய ஒளியினைப் பரவச்செய்யும். வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பாறைகள் மீண்டும் உருக ஆரம்பித்துவிடும். இந்த நிகழ்வு ஒரு தொடர்ச் சங்கிலிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு உருகும் பனிப்பாறைகளின் அளவு மிக அதிகமாக இருப்பது தான் கவலைக்குரிய விஷயம்ண்டாம். அங்கே இருப்பதெல்லாம் பனி.வெறும் பனி. ஒவ்வொரு வருடமும் இந்த சீசனில் அதாவது ஜூன் முதல் ஆகஸ்டு காலகட்டத்தில் இங்கே பனி உருகுவது சாதாரண நிகழ்வு தான் என்கிறார் ஜார்ஜியா பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் மோட். கிரீன்லாந்தின் பருவநிலை குறித்த ஆய்வில் இருக்கும் மோட்,” கடந்த 2012 ஆம் ஆண்டு தான் வரலாற்றிலேயே அதிக பனி உருகியது. இந்த வருட நிலையைப் பார்த்தால் அந்த ரெக்கார்ட் இப்போது முறியடிக்கப்படும் என்கிறார்.

2012 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது மூன்று வார காலத்திற்கு முன்பாகவே பனியானது உருக ஆரம்பித்திருக்கிறது. இதனால் அதிக அளவு பனி இந்த ஆண்டு உருகி கடலில் கலக்கும் என பருவநிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

என்னதான் காரணம்?
அல்பேடோ நிகழ்வு ஒவ்வொரு கோடைக்காலத்திலும் நடக்ககூடியவை தான். அப்படியென்றால் இத்தனை பிரம்மாண்ட அளவு பனி உருகியதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் அதற்கான விடை அட்லாண்டிக் கடலில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இதே மாதத்தில் அட்லாண்டிக் கடலில் இருந்து கிரீன்லாந்து நோக்கி ஈரப்பதம் அதிகமுள்ள காற்று வீசும். இது செங்குத்தான பனிப்பாறைகளின் மீது அதிக அழுத்தத்தை உருவாக்கி அதை உருகச்செய்து விடும். இதுதான் தற்போது அங்கே நடக்கிறது.
கடல்நீர் மட்டம் அதிகரிக்க காரணமாக இருக்கும் நாடுகளில் கிரீன்லாந்து முகமுக்கிய பங்காற்றுகிறது. ஏனெனில் இங்குள்ள பனியின் அளவு அப்படி. இந்த நிலை தொடருமாயின் எத்தனையோ கதைகளில், கட்டுரைகளில், படங்களில் எழுதப்பட்ட காட்டப்பட்ட இந்த அழகிய உலகின் அந்திமக்காலம் உண்மையாகவே நிகழ்ந்தேறும்.
-தமிழகத்திலிருந்து மாதவன்-

No comments