சத்தியலிங்கமும் வெள்ளை அடிக்கின்றார்?


ஊழல்குற்றச்சாட்டுக்களால் பதவி துறந்த முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சி வவுனியா அமைப்பாளருமான  சத்தியலிங்கம் நெதர்லாந்து தேசத்திலிருந்து சிங்கள தேசத்திற்கு நிதி திரட்டி கொடுத்தமை அம்பலமாகியுள்ளது.

சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் நெதர்லாந்து நாட்டில் இருந்து 60 மில்லியன் யூரோ ( 12,000 மில்லியன் இலங்கை ரூபா)நிதி வடமாகாண சுகாதார அபிவிருத்திக்காக பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் மாகாணசபை வெளிநாட்டு உதவியை நேரடியாகப் பெற முடியாத சூழ்நிலையில் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஊடாக அதனை பெறப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் வடக்கு அவலத்தை காண்பித்து தெற்கிற்கு பணம் பிச்சையெடுப்பதாகவும் அதில் சேப்பா எனும் நிறுவனத்துடன் இணைந்து முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஈடுபட்ட ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனாலும் சேப்பாவிற்கு முண்டுகொடுக்க நெதர்லாந்து ஒரு பகுதி நிதியை வழங்கியிருந்தது.

இதனையே முழு ஒத்துளைப்பும் பெறப்பட்டு அனைத்து ஒழுங்களும் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில் அண்மையில் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வடக்கு மாகாண வைத்தியசாலைகளிற்கு வருகைதந்த நெதர்லாந்து நாட்டுக் குழுவினர் மாகாண அதிகாரிகளுடன் இணைந்து பூர்வாங்க பணிகளை முன்னெடுத்திருந்தார்கள் என சத்தியலிங்கம் தெரிவித்திருந்தார்.

எனினும் வழமை போல பெருமளவு நிதி தெற்கிற்கு செல்ல சிறுபகுதியை வடக்கிற்கு கொண்டுவந்து தனது ஊழலை மறைக்க அவர் முற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

No comments