அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்துக - ஐ.நா

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுகலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்:-

வன்முறைக்கு வழியை ஏற்படுத்தும் தவறான தகவல்களை பரப்பாமல் இருக்க வேண்டிய பொறுப்பினை ஒவ்வொரு பொதுமகனுக்கும் இருக்க வேண்டும்.

அவசரகால சட்ட நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, அனைத்து சமூகத்தினர் மற்றும் தனிநபர்களின் உரிமைகளை மதிக்கும் விதமாக தகுந்த, பாரபட்சமற்ற முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் வன்முறையை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நாம் அனைவரும் இணைந்து சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தருணமே இது. அனைவரையும் உள்ளடக்கிய, ஒன்றிணைந்த அணுகுமுறை பின்பற்றப்படுவதோடு, அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்புக்கள் மற்றும் சமூகத்தலைவர்கள் அதனை முன்னெடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் ஐ.நா தெரிவித்துள்ளது.

No comments