நியூசிலாந்தில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பும் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலும்

இன்று நியூசிலாந்தில் 10வது முறையாகவும் தமிழர்இனவழிப்பு நாள் May 18 மாலை 6.00 மணிக்கு Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன்
நினைவு கூறப் பட்டது.

நூற்றுக்கணக்கான தமிழீழ மற்றும் தமிழக மக்கள்மட்டுமல்லாது பல்வேறு அமைப்புகள் நியூசிலாந்தின்பாராளுமன்ற பிரதிநிதிகள் சகிதம் இந் நிகழ்வானதுமுள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு மற்றுமோர் நீதிக்குரலாகஅமைந்திருந்தது .

நிகழ்வின் தொடக்கமாக TYO NZ இனரால் தமிழின அழிப்புகண்காட்சி உணர்வெழுச்சியுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்தஉணர்வு பூர்வமான நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாகமுதலில் பொது சுடரினை திரு காவியன் அவர்கள்ஒளிர்வித்தார். அதனை தொடர்ந்து நியூசிலாந்து தேசிய கொடியானது திரு.ஸுரு அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டதுடன் தமிழீழ தேசிய கொடியானது திருமதி விமலா மோகன்ராஜ் அவர்களால் ஏற்றிவிக்கப்பட்டது.

ஈகைசுடரினை வீரவேங்கை நிலோஜா அவர்களின் தயார்திருமதி தர்மலிங்கம் பத்மலோஜினி அவர்கள் ஏற்றி வைக்கஅதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலையில்உயிர்நீத்த அனைவருக்காகவும்மலர் வணக்கம்செலுத்தப்பட்டது.
நிகழ்வின்தொடர்ச்சியாக வரவேற்புரையானதுதிருசுந்தர்ராஜன் மற்றும் திருமதி விஜி அவர்களால்நிகழ்த்தப்பட்டது
அடுத்துமுள்ளிவாய்க்கால்பேரவல நினைவாக பாடல்ஒன்றுக்கு தரன் நாதனுடன் அபிஷேகா குகன் ஆகியோரின்நடனம் இடம்பெற்றது.
பின்னர்செல்வி சாருஜா சர்வேஸ்வரன் மற்றும் கிருத்திகாசுரேந்திரன் அவர்களால் தாய் மண்ணை முத்தமிடவேண்டும்என்ற பாடலுக்கு வலிகளை உணர்வாக்கிய நடனம்இடம்பெற்றது.
பின்னர்தமிழின பேரவலத்தின் வலிகளை செல்வன் தருண்நாதன் தன் கவிதை வரிகளால் வர்ணித்தார்.

அடுத்துமுக்கியமாக நியூசிலாந்தின் பாராளுமன்றஉறுப்பினர்களுடன் நியூசிலாந்தின்தமிழின உணர்வாளர் திருstu மற்றும் திரு மேர்வின் அவர்களும் இணைந்து தமிழினஅழிப்பு சம்பந்தமான பேச்சுக்கள் இடம்பெற்றது .

திருஸ்டூ அவர்கள் 2009 இல் தமிழின அழிப்பினை எதிர்த்துஎம்மக்களுடன் Auckland நியூஸிலாந்திலேஉண்ணாவிரதம்இருந்தவர் என்பது குறிப்பிடப்பட்டது.
பின்னர் TYO NZ இனரால் தமிழின அழிப்பு தொடர்பாகநடத்தப்பட்ட ஓவியப்போட்டிக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.
பின்னர் 2009 பேரவலத்தின் போது காயங்கள் தாங்கிய எம்மக்களின் சீவனை காத்த கஞ்சி வழங்கப்பட்டு நினைவுகூறப்பட்டது.
பின்னர் நிகழ்வின் இறுதியாக திரு மோகன் நியூசிலாந்து தேசிய கொடியினை இறக்கிவைத்தார். தமிழீழ தேசியக்கொடியினை திரு நாதன் இறக்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வின் போது முள்ளிவாய்க்கால் பேரழிவின்10ம் ஆண்டு நினைவாக இரத்த தானத்துக்கான ஒழுங்குகளும் வரும் 21ம் May 2019 அன்று முள்ளிவாய்க்கால் பேரவலநினைவாக நியூசிலாந்தின் பாராளுமன்றத்திலே ஒழுங்குபடுத்தப்பட்ட கேள்வி பதில் நேர நிகழ்வு விபரங்களும் வழங்கப்பட்டது. சிறப்பம்சமாகும்.

No comments