நினைவேந்தலிற்கு தயராகின்றது முள்ளிவாய்க்கால்!எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால்  பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் இம்மாதம் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது .
இதனை முன்னிட்டு நேற்று மாலை சிரமதான பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

 முன்னதாக நினைவுதூபியில் நினைவேந்தல் குழுவில் உள்ள அருட்தந்தையர், அருட்சகோதரிகள், திருகோணமலை தென்கையிலை ஆதீன குருக்கள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் , யாழ் பல்கலைகழக மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டனர் . இந்தநிலையில் இம்மாதம் 18 ஆம் திகதி  அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்ற உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது .

No comments