எயிட்ஸ் கிருமியை 90 பேருக்கு பரப்பிய மருத்துவர் கைது!

பாகிஸ்தானில் லார்கானா நகரில் HIV கிருமி கொண்ட ஊசியால் 90 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டதாகச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, மருத்துவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 65 குழந்தைகள் என்பது  வருந்தத்தக்க செய்தியாகவுள்ளது,

சுகாதாரத் துறை அதிகாரிகளிடமிருந்து கிடைத்த புகார்களைத் தொடர்ந்து, அந்த மருத்துவர் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது
அதேவேளை அந்த  மருத்துவருக்கும் HIV கிருமித்தொற்று இருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments