அகதிகளுக்காக 23பில்லியன் யூரோக்கள் ; ஜெர்மன் சாதனை!

10 லடச்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளுக்கான பாதுகாப்பையும் , வாழ்வுக்கான அத்தியாவசிய உதவிகளையும் செய்து வரும் ஜேர்மனிய அரசு கடந்த ஆண்டு  23,000,000,000 யூரோக்கள் ($25,650,000,000) செலவு செய்து சாதனை படைத்துள்ளதாக ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

அந்நாட்டுநிதி அமைச்சகம் தயாரித்துள்ள அரசாங்க அறிக்கையின்படி, இந்த செலவின் உயர்வு 2017 ( 20,800,000,000 )ஆண்டிலும் பார்க்க கிட்டத்தட்ட 11 சதவிகிதம் அதிகமாகும் என்று கூறுகிறது.

இந்த தொகை ஜெர்மனில் வாழும் அகதிகளுக்கானது மட்டுமல்லாமல் ஜெர்மனுக்கு வெளியே ஜெர்மன் அரசின் கட்டுப்பாட்டிலும், பராமரிப்பிலும் இருக்கும் அகதிகளின் செலவுகளும் அடங்கலாக என்று கூறப்படுகிறது.

அதே வேலை இந்த செலவின் அளவும் இந்த ஆண்டு 16 சதவீதம் கூடுதலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments