டக்ளசுக்கு இலங்கை இரணுவம் போதுமாம்

இலங்கையில் உருவாகியுள்ள வன்முறை சூழலை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கு பாதுகாப்பு தரப்பு மட்டும்போதும். வெளிநாட்ட உதவிகள் தேவையற்றவை என நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றாா்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு

பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.இந்த நடவடிகையை நாம் பிழை என்று கூறமுடியாது. நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கும் போது இவ்வாறான நடைமுறைகள் ஏற்படுவது வழமை. ஆனால் அந்த சட்டம் மனித தன்மையுடன் அமுல்படுத்தப்பட வேண்டும்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைகளை கட்டுப்படுத்த இலங்கை இராணுவத்தினரே போதும். இதற்காக வெளிநாட்டுத் தரப்பினரின் உதவிகள் தேவை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை செய்யப்பட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்” என்று தெரிவித்தார்.

No comments