ரணில் இருக்கும்போது நாடாளுமன்றில் குண்டு வெடிக்கவேண்டும் - விமல் ஆவேசம்


உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடா்பிலும், நாடாளுமன்ற ஊழியா்கள் தொடா்பில் அரசு மீது கடுமையான விமா்சனங்களை முன்வைத்திருக்கும் எதிா்கட்சி நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவங்ஷ,

பிரதமா் நாடாளுமன்றில் இருக்கும்போது குண்டுகள் வெடிக்கவேண்டும். என தான் வேண்டிக் கொள்வதாக நாடாளுமன்றில் கூறியிருக்கின்றாா். பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடியது,

இதன்போது சபாநாயகர் அறிவிப்பின் போது கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான பாதுகாப்பு விடயங்கள் குறித்து அறிவிப்பு விடுத்தார்.  இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த விசாரணைகளில் பாராளுமன்ற ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  நாளாந்தம் எமது அவதானம் இதில் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.  இதன்பின்னர் சபாநாயகர் அறிவிப்பு குறித்து 

பாராளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினை  தொடர்பில் அமைச்சர்கள் தனது கருத்தினை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments