தமிழர்கள் சுயஅபிலாசைகளுடன் வாழ்வதை உறுதிப்படுத்த தொழிற்கட்சி நடவடிக்கை எடுக்கும்

பொறுப்புக்கூறும் கடமையை சிறீலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறும் பத்தாவது நினைவாண்டை முன்னிட்டு, தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோபனினால் வெளியாக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக்கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் தொழிற்கட்சி எதிர்காலத்தில் பிரித்தானியாவில் ஆட்சி அமைக்கும் போது, தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், இலங்கையில் தமிழர்கள் சுயஅபிலாசைகளும் உரிமைகளும் பெற்று வாழ்வதையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு இன்னும் பொறுப்புகூறப்படவில்லை. இந்தவிடயங்கள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.

அத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, அவர்களது உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஜெரமி கோபன் தெரிவித்துள்ளார்.

No comments