மன்னாரில் தீப்பிடித்து எரிந்து சாம்பரானது வீடுமன்னாா்- தரவாங்கோட்டை பகுதியில் வீடொன்று திடீரென தீப்பிடித்து எாிந்த நிலையில், சுமாா் 10 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் எாிந்து நாசமாகியுள்ளனா். 
இந்த தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாததுடன், வீட்டிலிருந்தவா்கள் உயிராபத்து இல்லாமல் தப்பியிருக்கின்றனா். சம்பவம் தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை நடாத்தி வருகின்றனா். 
மேலும்  மன்னார் நகர சபை தவிசாளர் ஞா.அன்ரனி டேவிட்சன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் சிலர் சம்பவ இடத்துக்குச் சென்று குறித்த வீட்டின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதோடு, 
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தேவையான முதற்கட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடு்த்தனர்.

No comments