முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்துடன் அரசியலில் ஈடுபட்டதில்லை

இந்நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமூகத்துடன் அரசியலில் ஈடுபட்டதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வத்தளை பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமூகத்துடன் அரசியலில் ஈடுபட்டதில்லை எனவும் தங்களுடைய சமூகத்தினரை எவ்வாறு சரியான முறையில் வாழ்வது என்பது தொடர்பில் அவர் தெளிவுபடுத்தவிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments