விண்வெளி ஆய்வுத் துறையில் தடம்பதித்தது நேபாளம்!

நேபாள விஞ்ஞானிகள் உருவாக்கிய முதல் செயற்கைக்கோளான நேபாளிசாட்-1, அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை நள்ளிரவு 2.31 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது .

பூமியை 400 கி.மீ. தொலைவில் சுற்றிவரவிருக்கும் அந்த செயற்கைக்கோள், தொடக்கத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு மாதத்துக்கு நிலைநிறுத்தப்படும். அதற்குப் பிறகு, அது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்படும் எனவும் இது நேபாளத்தின் புவியியல்சார் தகவல்களைப் பெறும் வகையில், தொடர்ந்து பல்வேறு படங்களைப் பிடித்து நேபாளிசாட்-1 அனுப்பும் என்று கூறப்படுகிறது,

No comments