நாவற்குழியில் நட்டாற்றில் கைவிடப்பட்ட திட்டம்!


முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசனால் முன்னெடுக்கப்பட்ட நாவற்குழி மரநடுகை அவரது பதவியிழப்பினால் அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது.

வடமாகாணசபை அதிகாரிகளது அசமந்த போக்கினால் பல மில்லியனில் முன்னெடுக்கப்பட்ட குறித்த திட்டம் கைவிடப்பட்டு மரங்கள் அனைத்தும் தற்போதைய கடுமையான வெப்ப காலநிலையால் அழிவடைந்துள்ளது.நாட்டப்பட்ட மரங்களிற்கு நீர் ஊற்றும் நடவடிக்கையினை நிதி ஒதுக்கீடு இல்லையென தெரிplanrவித்து கைவிடப்பட்டுள்ளது.

இதனிடையே வலி தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மரம் ஒன்றை தறிக்கும் போது மூன்று மரங்களை நாட்ட சம்மதித்தால் மட்டுமே கட்டிட அனுமதி வழங்கப்படுமென சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தர்சன் தெரிவித்துள்ளார். 

குடாநாட்டில் மர அழிப்பு வேகமாக நடந்துவருவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பும் உச்சமடைந்துள்ளது.இந்நிலையிலேயே முன்மாதிரியாக  வலி தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மரம் ஒன்றை தறிக்கும் போது மூன்று மரங்களை நாட்ட சம்மதிக்கவேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments