டிரம்ப் இருந்த விடுதிக்குள் நுழைந்த சீனப் பெண் கைது!

அமொிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைய முற்பட்ட சீனப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

புளாரிடா மாநிலத்தில் அமைந்துள்ளு டிரம்புக்குச் சொந்தமான விடுதிக்குள் நுழைய முயன்ற சாங் யுஜிங்கிடம் கைத்தொலைபேசிகளும் வைரஸ் நிறைந்த யுஎஸ்பி ரைவரும் இருந்துள்ளன.

விசாரணைகளில் நீச்சல் குளத்திற்கு வந்ததாகக்கூறினார். பின்னர் சீன-அமெரிக்க நட்புறவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

நீச்சலுக்கு வந்த அவரிடம் நீச்சல் உடை இல்லை. நிகழ்வுக்காக வந்ததாகக்கூறிய போதும் அவ்வாறு ஒரு நிகழ்வு அங்கு இடம்பெறவில்லை.

அமெரிக்க-சீன வர்த்தக உறவைப் பற்றி டிரம்ப் குடும்பத்தாரிடம் பேசுவதற்கு வந்ததாகச் சாங் கூறினார்.

சார்ல்ஸ் எனும் தன்னுடைய சீன நண்பர் தன்னை அவ்வாறு செய்யச் சொன்னதாக அவர் கூறினார்.

சாங்கிடம் இரண்டு சீனக் கடவுச்சீட்டுகள் இருந்துள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

No comments