சிறிலங்காவின் செய்மதி இன்று ஏவப்படுகிறதாம்

சிறிலங்காவின் முதலாவது செய்மதி ராவணா-1 இன்று விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது. இந்தச் செய்மதியை  அன்ராரஸ் ஏவுகணை அனைத்துலக விண்வெளி மையத்துக்கு எடுத்துச் செல்லும்.

கிழக்கு வேர்ஜினியா கடற்கரையில் உள்ள நாசாவின் வலூப் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 2.16 மணிக்கு இந்தச் செய்மதி ஏவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்தர் சி கிளார்க் நிலையத்தைச் சேர்ந்த, சிறிலங்காவின் ஆய்வு விஞ்ஞானிகளான தரிந்து தயாரத்ன, துலானி சமிக்கா ஆகியோரால், ஜப்பானின் கையூஷூ  தொழில்நுட்ப நிறுவகத்தில் இந்த ராவணா-1 செய்மதி, வடிவமைக்கப்பட்டது.

சிறிலங்கா மற்றும் அயல் நாடுகளைப் படம் பிடிக்கக் கூடிய வசதிகள் இந்த செய்மதியில் உள்ளன. இது 11.3 செ.மீ x 10 செ.மீ. x 10 செ.மீ அளவுடையதும், 1.05 கிலோ எடையுள்ளதும் ஆகும்.

சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்தச் செய்மதி செயற்படக் கூடியது.

No comments