ராஜபக்ச குடும்பத்தை சிறைக்கு அனுப்புவோம் - பொன்சேகா சூழுரை

“கோட்டாபய ராஜபக்ச அல்லது மஹிந்த ராஜபக்ச ஆகியோரில் யார் களமிறங்கினாலும் நாம் அதனைக் கண்டு அஞ்சப் போவதில்லை. தாம் செய்த குற்றங்களுக்காக ராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில் சிறைக்குச் செல்ல நேரிடும்.”
– இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
கொழும்பு ஊடகம் ஒன்று குறித்த செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.
அதில் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது:-
“ஜனாதிபதித் தேர்தலுக்கு மஹிந்த தரப்பு தயார் எனில் அவர்கள் அதனை அறிவிக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஒரு பக்கமும், பொதுஜன பெரமுனவாக இன்னொரு அணியினர் மறு பக்கமும் உள்ளனர். இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஆகவே, இவர்களால் ஒரு தலைவரை – ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாது” – என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments