கல்முனை, சாய்ந்தமருது - சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை

கல்முனை- சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடா்ந்து இன்று அதிகாலை சாய்ந்தமருது, சம்மாந்துறை, மற்றும் சவளக்கடை பகுதிகள் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பகுதி பகுதியாக கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பொது மைதானங்கள், பொது இடங்களுக்கு அழைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவதுடன், தீவிரவாதிகளை அடையாளம் காணும் நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்ள்ளது.

இந்த நடவடிக்கையில் இராணுவம், விசேட அதிரடிப்படை, பொலிஸாா் இணைந்துள்ளதுடன், தப்பி சென்ற தீவிரவாதிகளை இலக்குவைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

No comments