ரணிலின் பதவி வெறியும் இஸ்லாமிய தீவிரவாதமும்



பதவி வெறியில் அலையும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்தும் அவர்களுக்கு உதவி வரும் முஸ்லீம் அரசியல் தலைமைகள் குறித்தும் ஏற்கனவே தெரிந்திருந்தும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தனது பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராசி இல்லாத தலைவர் என்றும் ஆளுமையற்ற தலைவர் என்றும் விமர்சிக்கப்படுவதுண்டு.

சிறிலங்காவின் ஜனாதிபதி அரியணையில் ஒரு முறையாவது ஏறிவிட வேண்டும் என துடிக்கும் ரணிலுக்கு அந்த வாய்ப்பு எட்டாக் கனியாகவே இருந்துவருகின்றது. அவர் தனக்கு கிடைத்த பிரதமர் பதவியைக் ஒரு போதும் ஐந்து ஆண்டுகளும் முழுமையாக அனுபவித்ததில்லை.

அவர் பிரதமராக பதவி வகித்த கலங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு வெளியேறியிருக்கிறார். அல்லது ஆட்சி கவிழ்ப்புக்களில் வெளியேறியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை ஒரு காலத்திலும் தமிழர்களதோ முஸ்லீம்களதோ ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்பதுதான் ஜதார்த்த நிலைமை.

2017  ஆம் ஆண்டு நாடாளுமன்றில் பிணை முறி மோசடி தொடர்பில் வெளிக்கொணரப்பட்டபோது ரணில் விக்கிரமசிங்கவின் கையாள் என வர்ணிக்கப்படும் தமிழ் அரசியல்வாதியாக சுமந்திரனின் சாமர்த்தியத்தால் பிணை முறி தொடர்பில் நாாளுமன்றில் விவாதிக்காமலேயே காப்பாற்றப்பட்டார்.



2018 ஒக்ரோபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆட்சிக் கவிழ்ப்பு மேற்கொள்ளப்பட்டு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கலைக்கப்பட்டபோது தமிழ் முஸ்லீம் அரசியல் தலைமைகளின் ஆசீர்வாதத்தோடே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அரியணை ஏறினார்.

அதன் பின்னர் வரவு செலவுத்திட்டத்திலும் தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகளினாலேயே ரணில் விக்கிரமசிங்க காப்பாற்றப்பட்டார். இவற்றின் பின்னணியிலேயே தமது பதவியை காப்பாற்றிவரும் முஸ்லீம் அமைச்சர்களுக்கு இலங்கையில் செயற்பட்டுவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவரவாதிகளுடன் நேரடியாகத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டுவருகின்றது.

நிதியுதவி, தங்குமிட உதவி என்பவற்றிற்கு அப்பால் ஆயுதப் பயிற்சிக்கான உதவிகளுக்குக் கூட தீவரவாதிகளுக்கு முஸ்லீம் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைமகள் உதவிவருகின்றனர். இவற்றிற்கப்பால் கைதுகளின் போது தீவரவாதிகளை வெளியில் எடுக்கின்ற கைங்கரியங்களில் கூட முஸ்லீம் அரசியல் தலைமைகள் நேரடியாக ஈடுபட்டிருக்கின்றன.

எனினும் அவர்கள் மீது நடவடிக்கைக்கு முனைந்தால் அடுத்த நொடியே தன் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதாலும் தன் வாழ்நாளில் ஒரு போதும் ஜனாதிபதி ஆகிவிட துடிக்கும் ஆசை நிறைவேறாதே போய்விடும் என்பதுமே ரணிலை கட்டிப் போட்டு வைத்திருக்கின்றது.

இதுதான் இத்தனை குண்டுவெடிப்புகளுக்குப் பின்னும் தீவிரவாதத்தை ஆதரித்து ரணில் பேசும் அளவிற்கு நிலைமை சென்றிருக்கின்றது.

நேற்று சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டு நாடு திரும்பிய இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும் எனினும் வௌிநாட்டு தீவிரவாத அமைப்பில் இணைவது இலங்கை சட்டப்படி சட்டவிரோதமற்றதென்பதால் அவர்களை கைது செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறும் அளவிற்கு அவரது பதவி வெறி கொண்டு சென்றிருக்கிறது.

No comments