யார் செல்லப்பிள்ளை போட்டி ஆரம்பம்?


இலங்கை ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று கொண்டாடப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் வடக்கின் பிரதிநிதி யாரென்பதில் ஏட்டிக்குபோட்டியாக தலைகள் பல முட்டிமோதிக்கொண்டன.

ஒருபுறம் மைத்திரியின் பிரதிநிதிகளாக ஆளுநர் சுரேன் இராகவன் மற்றும் டக்ளஸ் போன்றோர் முனைப்புக்காட்ட மைத்திரியினை துரோகியென வசைபாடி திரிந்த சுமந்திரனும் களமிறங்கி கதிரைகளை  கைப்பற்றுவதில் போட்டியிட்டிருந்தார். 

அனைத்து இலங்கையர்களுடனும் இணைந்து தேசிய பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளிப்பதாக தெரிவித்து மைத்ரிபால சிறிசேன இன்று (14) கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

மலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைதந்திருந்ததுடன், அவர்கள் அனைவரையும் சுமூகமாக வரவேற்ற ஜனாதிபதி அவர்கள், உணவு உட்கொள்ளும் சுபநேரத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு விருந்துபசாரங்களையும் வழங்கியிருந்தார்.


கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற அரசியல் குழப்பத்தையடுத்து மைத்திரியினை தி;ட்டுவதில் முனைப்பாக இருந்த சுமந்திரன் நல்ல பிள்ளையாக இன்று மைத்திரியிடம் தேடிச்சென்றிருந்தார்.எனினும் ஏற்கனவே டக்ளஸ்,சுரேன் இராகவன் முன்னிலையில் சுமந்திரனை மைத்திரி கண்டுகொள்ளவில்லையென தெரியவருகின்றது.

No comments