தம்புள்ளையில் வெடிகுண்டு சந்தேக நபர்கள் இருவர் கைது

குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் இன்று காலை தம்புள்ளைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளைப் பிரதேசத்தில்  சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய போதே இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் தம்புள்ளைப் பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments