நெதர்லாந்தில் துப்பாக்கிச் சூடு! மூவர் பலி! 9 பேர் காயம்!

நெதர்லாந்து உட்ரெச்ட் (Utrecht) நகரில் டிராமில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் மீது இனந்தொியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

உட்ரெச்ட் நகரில் இன்று முற்பகல் 10.45 மணியளவில் டிராமில் பயணிகள் பயணித்துக்கொண்டிருந்த போது, டிராமில் புகுந்த இனந்தொியாத நபர் பயணிகளை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இத்தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 போின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர் என உட்ரெச்ட் நகர முதல்வர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் காயமடைந்தவர்களை  அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கும் துருக்கி நாட்டவரான 37 வயதுடைய கொக்மென் தனிஸ் (Gökmen Tanis) என்பவரது சிசிரிவிடியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 

No comments