கிளிநொச்சியில் இன்றும் கவனயீர்ப்பு!
இலங்கை அரசிற்கு சர்வதேச சமூகம் மீண்டும் இரண்டுவருட கால அவகாசத்தை வழங்கியுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், கிளிநொச்சியில் இன்று 30ம் திகதி சனிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டம், இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்பாக ஏ - 9 வீதியில் இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைத் தேடி கிளிநொச்சியில், 769 நாள்களாக சுழற்சி முறையிலான போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், மாதம் தோறும் ஒவ்வொரு 30ஆம் திகதியும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது போராட்டம் கண்டுகொள்ளப்படாதுள்ள நிலையில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment