எல்லைக்கிராமங்களில் குடியேற்றங்கள் மும்முரம்!


வவுனியா வடக்கு தமிழ் எல்லைக்கிராமங்களான ஊற்றுக்குளம், கச்சல் சமளங்குளம் இடையில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்ற முயற்சிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுவருகின்றது.இதன் தொடச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுவதுடன், அங்குள்ள விகாரை விரிவுபடுத்தப்பட்டு குடியேற்றப்படும் சிங்கள மக்கள் விவசாயம் செய்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல சிங்கள மக்களுடைய மாடுகளை கட்டுவதற்கான பல பட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன,கச்சல் சமளங்குளத்தின் கீழ் குடியேற்றப்படும் சிங்கள மக்கள் சிறுபோக விவசாயம் செய்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்படுகின்றது. மேலும் பாதைகள் சீரமைக்கப்படுவதுடன்,சிறிய கொட்டில் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த விகாரை தற்போது விஸ்த்தீரணமாக அமைக்கப்பட்டு இரு பௌத்த பிக்குகள் அங்கு தங்கியிருக்கின்றனரென வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்களின் கண்டனத்தை கண்டுகொள்ளாது நல்லாட்சி என சொல்லிக்கொள்ளும் அரசு மும்முரமாக குடியேற்ற திட்டத்தை முன்னெடுத்தே வருகின்றது.

No comments