தமிழ் ஊடகங்களிற்கு வலை வீசும் மகிந்த-கோத்தா தரப்பு?


அடுத்த தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வடக்கு மற்றும் கிழக்கு ஊடகவியலாளர்களை கைகளுள் போட்டுக்கொள்ள மகிந்த-கோத்தா தரப்பு மும்முரமாகியுள்ளது.இதற்கென தரகர்கள் பலரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கூட்டமைப்பு ரணிலுடன் ஜக்கியமாகியுள்ள நிலையில் வடக்கில் தனது வாக்கு வங்கிக்கு டக்ளஸ் தரப்பினையும் சிறிடெலோ மற்றும் வியாழேந்திரன் போன்றோரையுமே  மகிந்த-கோத்தா தரப்பு நம்பியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமக்கு வெள்ளையடிக்க மகிந்த-கோத்தா தரப்பு மும்முரமாகியுள்ளது.அவ்வகையில் கோத்தபாய தமிழ் ஊடகங்களிற்கு துரத்தி துரத்தி பேட்டி வழங்குவது தமிழ் ஊடகங்களில் சாதாரணமாகியுள்ளது.
ஆட்சிக்கதிரையிலிருக்கையில் தமிழ் ஊடகங்களை பற தெமில் நாய்கள் என்ற மகிந்த-கோத்தா தரப்பு தற்போது இறங்கி வந்து ஊடக ஆதரவிற்கு அலைகின்றது.

இதனிடையே ரணிலை காப்பாற்ற மும்முரமாகியுள்ள அமெரிக்கா தனது மிலேனியம் சவால் அமைப்பின் பணியகம் ஒன்றை அலரி மாளிகையில் அமைத்துள்ளதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே அண்மையில் நாடாளுமன்றத்தில் நடந்த குழுநிலை விவாதத்தில்  உரையாற்றிய விமல் வீரவன்ச, சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகையில் அமெரிக்கா, மிலேனியம் சவால் அமைப்பின் செயலகத்தை அமைத்துள்ளது என்றும், கொழும்பு துறைமுகத்தில் இருந்து திருகோணமலை வரை, 200 கி.மீ தூரத்துக்கு சிறப்பு பொருளாதார வலயம் அமைக்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், குற்றம்சாட்டியிருந்தார்.எனினும் ரணில் தரப்பு அதனை மறுதலித்துள்ளது.

No comments