தற்படம் எடுத்த பெண்ணைத் தாக்கியது கருஞ்சிறுத்தை!

கருஞ்சிறுத்தையுடன் தற்படம் (செல்பி) எடுக்க முற்பட்ட பெண் ஒருவரை கருஞ்சிறுத்தை தாக்கியுள்ளது.

அமெரிக்கா, அரிசோனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் உள்ள உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கருஞ்சிறுத்தையுடன் தற்படம் எடுக்க ஆசைப்பட்ட பெண், கூண்டின் வெளிப்பகுதியில் சாய்ந்து கொண்டு தற்படம் எடுக்கும் போது சிறுத்தை பின்னால் பாய்ந்து வந்து தாக்கியுள்ளது.

சிறுத்தையின் தாக்குதலில் காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிற்சை வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான 30 வயதுப் பெண் தற்போது நலமாக இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

No comments