மீண்டும் சபரிமலைக்கு செல்வோம்!கனகதுர்கா.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் கனகதுர்கா மற்றும் பிந்து என்ற 2 பெண்கள் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். இதனையடுத்து கோயிலை புனிதப்படுத்தும் பரிகார பூஜை நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிப்ரவரி 12ம் தேதி நடை திறக்கும் போது இருவரும் மீண்டும் சபரிமலை செல்லவிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சபரிமலை கோயிலுக்கு சென்று வந்த பிறகு இரண்டு பெண்களும் சமுதாய புறக்கணிப்பை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைக்காரர்கள் கூட பொருட்களை வாங்க தங்களை அனுமதிப்பதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments