மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!


மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

மன்னார் மனித புதைகுழி தோண்டப்படும் இடத்தில் இருந்து பொலிஸ் நிலைய வீதியின் ஊடாக சென்று மன்னார் கச்சேரி வரை கண்டன பேரணி நடைபெற்றது.

இவ் கண்டன போராட்டத்தின் போது இனிவருங்காலத்தில் ஜக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க கூடாது என்றும் இலங்கைக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி கோசங்கள் எழுப்பிவாறு பயணித்திருந்தனர்.

அத்துடன் ஐ.நா சபைக்கு மகஜர் ஒன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்களினால் அருட்தந்தை ஜெயபாலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments